பக்கம் எண் :

259

  பன்னெறி
 
 
சத்திய மெனக்கொண் டேகல்
    சக்கினை மூடி நீண்ட
பித்திகை யேறிச் செல்லும்
    பேதைமை நிகர்க்கு மாதோ.
  கடலால் சூழப்பட்ட உலகத்தில் சிலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று இனிமையுற உரைப்பர். அவர்கள் உரைப்பனவற்றை அழகிய காதலால் கேட்பதல்லாமல் மெய்யென்று கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் கண்களை மூடி உயரமான சுவர் ஏறிச்செல்லும் அறிவிலான் ஆவன்.
  அத்தி-கடல். வனம்-அழகு. சக்கு-கண். பித்திகை-சுவர்.
 

5

  பகைவர்க்குதவி செய்தல்
  ஒட்டார்க்குச் செய்யுதவி வீடு ஒட்டற்காம் வித்து
529
நள்ளுநர் தமக்கு மென்றும்
   நன்றெமக் கியற்று வோர்க்கும்
உள்ளுவந் தியற்று கின்ற
   வுதவிதா னரிய தன்று
புள்ளுவ மிழைக்கா நின்ற
   பொருந்தலர்க் காற்று நன்றி
விள்ளும்வீட் டின்பந் தன்னை
   விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே.
  எந்நாளும் தம்மைவிட்டு அகலாதிருக்கும் உணர்ச்சி ஒத்த நண்பர்கட்கும், நமக்கு நன்றே புரிந்து வரும் ஊராண்மையுள்ள உயர்ந்தோர்க்கும் நாம் மனமகிழ்ந்து செய்யும் உதவி அருமையுடைய தொன்றாகாது. நமக்கு வஞ்சனையால் கேடு செய்யும் பகைவர்க்கு நன்மை செய்தலே மேலானது. அதுவே பிறவித் துன்பத்தைப் போக்கி, வீட்டின்பமாகிய பேரின்பப் பெருவாழ்வைத் தரும் உறுதியான வித்தாகும்.
  நள்ளுநர்-நண்பர். புள்ளுவம்-வஞ்சனை. விள்ளும்-நீக்கும்.
 

6