பக்கம் எண் :

258

 நீதி நூல்
 
 
கலமென மானம் பூண்ட
   கலைவலோ ரடங்கி நிற்பர்
புலனில்சீத் தையர்த மைத்தாம்
   புகழ்ந்தெங்குந் திரிவர் மாதோ.
 முத்து பவழம் முதலிய உயர்ந்த மணிகள் கடலின்கண் ஆழத்தில் மறைந்திருக்கும். கடல்நீரின் மேல்மட்டத்தில் எல்லாருங் காணும்படி சிறுதுரும்பு அங்கும் இங்கும் அலையும். அவைபோன்று, தன்மதிப்பே அணியெனக் கொண்ட கற்றறிவல்ல பெரியோர் அடங்கிநிற்பர். அறிவில்லாத கீழோர் தம்மைத்தாமே புகழ்ந்து எல்லா இடங்களிலும் மிக்க செருக்குடன் அலைவர்.
 குலமணி-உயர்ந்த மணி. குரவை-கடல். சஞ்சரித்தல்-அலைதல். கலம்-அணி. மானம்-தன்மதிப்பு. சீத்தையர்-கீழோர்.
 

3

 பேணுதல்
 செலவிலா வரவாம் சிறப்புறப் பேணல்
527
எதிர்சென்று முகமன் கூறி யிருக்கையு நல்கி யுண்டே
அதிசய மெனவி னாவி யன்பொடு முகம லர்ந்து
துதிபுரிந் துபச ரிக்குந் தொழிலினாற் செலவொன் றில்லை
யதிர்கட லுலகு ளோர்தம் அன்பெலாம் வரவா மாதோ.
 ஒருவரைக் கண்டதும் இருக்கை எழுந்து, எதிர்சென்று நன்றாக வரவேற்று, புகழ்மொழிந்து, இருக்க மணை, தவிசு முதலியன நல்கி, புதுமைநலம் முதலிய வினவி, அகத்தன்பும் முகமலர்ச்சியும், பொருந்த வாழ்த்திப் பேணும் பெருஞ்செயலால் ஒருகாசும் செலவாவதில்லை. அதன்மேலும் ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட உலகில் வாழ்வோர் அன்பு முழுவதும் நிலைத்த வரவாகும்.
 முகமன்-புகழ். அதிசயம்-புதுமை. துதி-வாழ்த்து.
 

4

 நம்பி மோசம் போகாமை
  கரவுரை கைக்கொள்ளல் கண்மூடிச் சுவர்ஏறல்
528
அத்திசூ ழுலகிற் சில்லோ
    ரகத்தொன்றும் வாக்கி லொன்றும்
வைத்திதஞ் சொலலா லியாவும்
    வனச்செவி யேற்ப தன்றிச்