| | அதி. 45--பன்னெறி |
| | தன்னைத்தானறிதல் |
| | பகைவன் சொல்லால் திருந்தும் பண்பு |
| 524 | தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே உன்னு கின்றவ னோங்கிய நட்பினோர் நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம் பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ. |
|
| | ஒருவன் தன்னுடைய மெய்யான நிலையையும் பண்பையும் ஆய்ந்துணர நினைத்தால், அவன் நண்பர் சொல்வதை நம்பாமல் பகைவர் சொல்லுவதை நம்புதல் வேண்டும். அப்பொழுதுதான் பயனடையலாம். |
| | குணம்-பண்பு. உன்னல்-நினைத்தல். நள்ளார்-பகைவர். |
| | 1 |
| | பெரியோரடக்கம் |
| | என்றும் பெரியோர் பணிந்தே சிறப்பர் |
| 525 | தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர் காமரம் வளைதல்போற் கலையு ணர்ந்திடும் தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும் பாமர ரெவரையும் பணிந்தி டார்களே. |
|
| | தேன் நிறைந்த சுவைமிக்க பலவாய் அடர்ந்துஅமைந்துள்ள சோலைமரங்கள் தாமாகவே வளையும் தன்மைபோல் எல்லாக் கலையும் கற்றுணர்ந்த நல்மனச் சான்றோர் யாவரையும் தொழுவர். அறிவில்லாத் தாழ்நிலையுடையோர் எவரையும் பணியார். |
| | செறிந்து-அடர்ந்து. கா-சோலை. தூ-நன்மை. பாமரர்-அறிவிலார். |
| | 2 |
| | இதுவுமது |
| | ஒளிமணி கடலின் ஆழத் துறையும் |
| 526 | குலமணி வெளியு றாதாழ் குரவையூ டொளித் திருக்குஞ் சலமிசை யெவருங் காணச் சஞ்சரித் திடுந்து ரும்பு |
|
| | நீ.- 17 |