காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை, மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக், கடுவெளி உருட்டிய சகடக் காலைப் | 35 |
| | |
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக் காமக் காற்றெடுத்து அலைப்பக் கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக் நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப் | 40 |
| | |
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின் அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்; வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங் கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்; இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்; | 45 |
| | |
அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்; மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக் கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம், தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப் பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும் | 50 |
| | |
எம்பெரு மானின் இணையடிக்கு அபயம் அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே! | |
| | |
கச்சித் திரு அகவல் திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் | 5 |
| | |
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன் விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்; முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும், வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் | 10 |