அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்கிறார். கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா? இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது. ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது. சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத் தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான் கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப் போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில் கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப் படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில் |