பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்229


   இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம்
படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது.

     ஆசைக்கு  இல்லை,  இல்லை  ஆசையை  அடக்குவதற்கு  ஒரிரண்டு
பாடல்களை   இங்கு   ஆய்வு   செய்தோமானால்   அவர்   இறைவனைக்
காணுவதற்குச்  சொன்ன தத்துவங்களை முழுவதுமாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?

     இறைவனின் தாளை அடைவதற்கு அவர் கூறும் வழியைக் கேளுங்கள்.

“நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றுஞ் சொல்லாதே”

     அவனுக்கு  இறைவனின்  தாளை  அடைய வேண்டும் என்பது ஆசை.
அதற்காக   என்ன   செய்ய   வேண்டும்?  திருக்குறளைப்  படித்துப்  பார்
என்கின்றனர் அறிஞர்கள்.

    நான் கேட்டது இறைவனை அடைய வழி. நீங்கள் சொல்வதோ இவ்வுலக
வாழ்க்கை  வாழ்வதற்கான  நெறி. வாழ்பவருக்குச் சொல்லவேண்டிய வழியை
வாழ்ந்து முடித்து விட்டவனிடம் சொல்கிறீரே.

    ஐயப்பாடு நியாயம்தான். நீர் வாழ்ந்து முடித்து விட்டீரா? சரி அப்படியே
இருக்கட்டும்.  நீர்  வாழ்ந்து முடித்தவரென்றால் குறளின் நெறிகளிலேயே நீர்
தேடிய வினாவுக்கு விடை கிடைத்திருக்குமே.

     புரியவில்லை,,,,,,