பக்கம் எண் :

250சித்தர் பாடல்கள்

6. குதம்பைச்சித்தர் பாடல்

     அழுகணி   சித்தரின்   என்   கண்ணம்மா,   அகப்பேய்   சித்தரின்
அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’
என்ற  வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த
பெண்ணை முன்னிலைப்படுத்திப்  பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற
 பெயர் பெற்றார் என்பர்.

     பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண்
குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள்
அணியும்   நிலையில்   காதில்  குதம்பை   என்ற  ஆபரணத்தை  அணிந்
திருக்கையில்  அவ்வளவு  அழகாகக்  காட்சி  தருமாம்  அந்தக்  குழந்தை.
அதனால்  அதனை  ‘குதம்பை’  என்ற சிறப்புப்  பெயராலேயே அழைக்கத்
தொடங்கினார்களாம்.

     இந்தக்  கதை  இப்படியிருக்க,  இவர்  இடையர்  குலத்தைச்  சேர்ந்த
கோபாலர்    தம்பதியர்க்கு    மகனாகப்    பிறந்து   சித்தர்   ஒருவரிடம்
ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும்
கூறப்படுவதுண்டு.

     ஏனைய  சித்தர்களைப் போல இவரும்  தமது பாடலில் “தன்னையறிய
வேணும்   சாராமல்   சாரவேணும்”   என்ற   தத்துவக்   கொள்கையைப்
பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று