9. பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் துறவை மேற்கொண்ட பட்டினத்தார் உஞ்சேனை மாகாளபுரத்திற்குச் சென்று மாகாளேசுவரனை வணங்கி விட்டு ஊர்ப் புறத்திலுள்ள பிள்ளையார் கோவிலில் நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது அவ்வூர் மன்னர் பத்திரகிரியின் அரண்மனையில் ஆபரணங்களைக் கொள்ளையிட்டு வந்த திருடர்கள் அரண்மனைக் கொள்ளை வெற்றிகரமாக முடிந்ததால் பிள்ளையாரின் பங்காக ஒரு முத்து மாலையை அவரை நோக்கி வீசிச் சென்றனர். கொள்ளையர் வீசிய முத்துமாலை பட்டினத்தாரின் கழுத்தில் போய் விழுந்தது. மறுநாள் அரண்மனைக் கொள்ளையரைத் தேடிவந்த காவலர் பட்டினத்தாரைக் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகித்து மன்னரிடம் தெரிவித்தனர். மன்னரும் உடனே கோபத்துடன் ‘கள்வனைக் கழுவேற்றுக’ என்று கட்டளையிட்டார். கழுமரத்திற்குப் பட்டினத்தடிகள் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் கழு மரத்தை ஏறிட்டு நோக்கிய பட்டினத்தடிகள் ‘விதியின் வலிமையை எண்ணி என் செயலாவதியா தொன்றுமில்லை. இனித் தெய்வமே உன் செயலேயென்று உணரப் பெற்றேன்’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடவே கழு மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பத்திரகிரி மன்னர் தவத்தின் சக்தியை உணர்ந்து தம் மணிமுடி அரச |