பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்355


 கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
     கழுகு கொன்றது பாருங்கடி!
  
58.ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
     புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
     கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!
  
59.முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
     மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
     மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!
  
60.அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
     அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
     செந்தண லானதே வாலைப் பெண்ணே!
  
61.முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
     மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
     அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!
  
62.இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
     நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
     காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.
  
63.அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
     ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
     கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.
  
64.காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
     ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
     மானுடன் கோட்டை இடித்தவளாம்.