65. | மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள் ஆதர வாகிய தங்கையா னாள்நமக் காசைக் கொழுந்தியு மாமியானாள். |
| |
66. | சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்; ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள் ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள். |
| |
67. | இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த ஈனா மலடி கொடுஞ்சூலி; மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த வயசு வாலை திரிசூலி. |
| |
68. | கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள் கண்ணு பெரிதோ முகம் பெரிதோ? சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான் சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே! |
| |
69. | அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல அப்படி வாலை பெரிதானால் பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி |
| |
70. | மாமிச மானா லெலும்புமுண் டுசதை வாங்கி ஓடு கழன்றுவிடும்; ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை யாடிக் கும்மி அடியுங்கடி. |
| |
71. | பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் விளையாதென்று கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே! |
| |
72. | மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம் வாசமில் லாமலே பூவுமில்லை; |