| பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது பேணிப்பாரடி வாலைப் பெண்ணே! |
| |
73. | நந்தவனத்திலே சோதியுண் டுநிலம் நித்திய பேருக்கு நெல்லுமுண்டு; விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே! |
| |
74. | வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக் கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்; வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே! |
| |
75. | வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங் காப்பது சேலைக்கு மேலுமில்லை; பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக் கும்மிக்கு மேலான பாடலில்லை. |
| |
76. | நாட்டத்தை கண்டா லறியலா குமந்த நாலாறு வாசல் கடக்கலாகும்; பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே! |
| |
77. | ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்; ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம் அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே! |
| |
78. | இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே; அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே! |
| |
79. | வீணாசை கொண்டு திரியா தேயிது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி காணலா மாகாய மாளலாமே. |