80. | பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ? கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை கொடுத்த தாயும் நிசமாமோ? |
| |
81. | தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம் தாமே யிருவருந் தாங்கொடுத்தார்; காயும் பழமுஞ் சரியா மோஉன்றன் கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே! |
| |
82. | பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற பிள்ளை மசானக் கரையின் மட்டும்; தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும். |
| |
83. | பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச போக்கிய மும்வந்த தானாக்கால் சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத் திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும். |
| |
84. | திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ் சாகாத பேரி லொருவரென்றும் அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே! |
| |
85. | மெத்தை தனிலே படுத்திருந் துநாமும் மெல்லிய ரோடு சிரிக்கும்போது யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும் செத்த சவமடி வாலைப் பெண்ணே! |
| |
86. | ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க் கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்; நாளையென் றுசொல்ல லாகா தேயென்று நான்மறை வேத முழங்குதடி. |
| |
87. | பஞ்சை பனாதி யடியாதே யந்தப் பாவந் தொலைய முடியாதே; |