பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்359


 தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
     வஞ்சனை செய்ய நினையாதே.
  
88.கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
     காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
     பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.
  
89.சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
     சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
     மனத்தை நோகவும் செய்யாதே.
  
90.வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
     மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
     பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!
  
91.கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
     கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
     அறிவு தானடி வாலைப் பெண்ணே!
  
92.காரிய னாகினும் வீரியம் பேசவும்
     காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
     பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.
  
93.காசார் கள்பகை செய்யா தேநடுக்
     காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
     தேவடி யாள்தனம் பண்ணாதே.
  
94.தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
     தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
     ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!