பக்கம் எண் :

360சித்தர் பாடல்கள்

95.சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
     தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
     உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.
  
96.பாலோடு முண்டிடு பூனையு முண்டது
     மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
     வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.
  
97.கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
     கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
     பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.
  
98.ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
     மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
     வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!
  
99.கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
     கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
     வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!
  
100.இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
     என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
     தேவர்க ளுடனே சேரவேண்டும்.
  
101.உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
     உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
     அவனே குருவடி வாலைப் பெண்ணே!
  
102.பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
     பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்