பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்361


 காரண குருஅ வனுமல் லவிவன்
     காரிய குருபொ ருள்பறிப்பான்.
  
103.எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
     பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
     ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!
  
104.ஆதிவா லைபெரிதானா லும்அவள்
     அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
     நாயக னல்ல சிவம்பெரிது.
  
105.ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
     அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
     பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.
  
106.நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
     நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
     உற்றகா லனையுந் தானுதைப்பாள்.
  
107.பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
     னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
     எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.
  
108.தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
     செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
     நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.
  
109.ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
     அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
     கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!