பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்365


      மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்;
     திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு;
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்;
     அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.
  
4.பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்;
     பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
     மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்;
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற்
     காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
     உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!