12.அகஸ்தியர் ஞானம் - 9 “தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும் போது நான் என்று கருப் பிடித்துக் கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு.” இவ்வாறு பாடிய இந்தச் சித்தர், “மாடுதானானாலும் ஒரு போக்குண்டு. மனிதனுக்கோ அவ்வளவு தெரியாதப்பா!” என்று இடித்துரைத்து, “உடல் உயிரும் பூரணமும் அயன்மான் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப் போனார்; உடல் உயிரும் பூரண அடி முடியுமாச்சே” என்று ஒரு தத்துவத்தை நிலை நிறுத்தி உலகியல்புகளையும் மனச் செம்மை முதலான அறநெறிகள் பலவற்றையும் எடுத்துரைத்திருக்கிறார். அகஸ்தியர் என்னும் பெயரில் வேத புராண காலங்களிலும், பழந்தமிழ் சங்க காலத்திலும். மத்திய காலத்திலும், முனிவர்களாகவும், புலவர்களாகவும், மருத்துவர்களாகவும், சோதிடர்களாகவும் பலர் இருந்திருக்கின்றன. அவர்களைப் பற்றிய கதைகளும் பல உண்டு. அவர்களில் இந்த அகஸ்தியர் என்ன தொடர்புடையவர் என்பது தெரியவில்லை. இவர் அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் போக முனிவரின் காலத்தவராக இருக்கலாம். கருவூர்த் தேவருக்குப் போக முனிவர் குருவெனக் கூறப்படுவதால் பதினொன்றாம் நூற்றாண்டாக |