பக்கம் எண் :

398சித்தர் பாடல்கள்

17. கைலாயக் கம்பளிச் சட்டை முனி
நாயனார் பாடல்

‘பொங்குகின்ற காமம் என்ன? சிவத்தின் கூறு!
     பொல்லாத ஆசை என்ன? மாலின் கூறு!
மயங்குகின்ற மோகம் என்ன? மகேசன் கூறு!’

     இவ்வாறு  ஆராய்கிற  இந்தச் சித்தர் முன் ஞானம் நூறு பின் ஞானம்
நூறு என  இருநூறு  பாடல்கள் இயற்றி  இருக்கிறார்.  இவர்  நவநாதர்களில்
ஒருவராகத் தம்மைக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன் ஞானம் நூறு

அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
     அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
     புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
     நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
     மூவுலகு மெச்சுதற்குக் காப்புத் தானே.

1
  
தாங்கிநின்ற சரியையிலே நின்றுசடம் வீழில்
     தப்பாது கிரியையுள்ளே சாரப் பண்ணும்
வாங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
     மகத்தான வுடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
     உத்தமனே! உயர்ந்துநின்ற ஞானந் தோற்றும்