நிறைந்திட்ட அகண்டமுத்தி சென்றே ஆடி நேரான அண்டமுதற் புவனம் பார்த்து முறைத்திட்டந் தப்பாமற் சமாதி நின்றால் முழுயோகி முழுஞான முமூட்சா வாயே. | 43 |
| | |
ஆமப்பா விதற்கு முன்னப் பியாச மார்க்கம் அறைகுவே னட்டாங்கம் நன்றாய்க் கேளு; ஓமப்பா வகையாக விரித்துச் சொல்வேன் உத்தமனே சாட்சிநித் திரையைப் போக்கு தாமப்பா சதாநித்தம் தார கத்தே சார்ந்துநின்ற கேசநிலை சதாநித் தம்பார் சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால் சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே. | 44 |
| | |
சொல்லுறேன் ரவிமதியும் வன்னி கூடிச் சொலித்துநின்ற விடமல்லோ கேசரிதா னப்பா சொல்லுறே னதைப்பார்மனஞ் செயநீ ராகும் சுத்தவெளி யடியோடே தாக்கி யேத்தும் சொல்லுறேன் மனம்புத்தி சித்த மென்பார் தொடர்ந்துநின்ற குருபதத்தைச் சூட்டிக் கேளு சொல்லுறே னறிந்தமட்டும் புருவ மையம் சூட்சந்தொட் டேறியட்டாங் கத்துறை கேளே. | 45 |
| | |
கேளப்பா ஏமத்தைச் சொல்வே நானுங் கெடியான நேமமூட னாசங் கொண்டு வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு வேளப்பா ஏமமென்ற பத்துஞ் சொல்வேன் வேதாந்த பொறியறிந்தோர் பெரியோர் தாமே. | 46 |
| | |
பெரியோர்கள் அண்டமென்ற ஆன்மா நோக்கிப் பேரான பரிச்சின்ன மனமு மாகி அறியோர்கள் சாதியென்ற ஆச்சிரம் விட்டே ஆசையென்ற விகற்பமெல்லா மடித்துத் தள்ளிப் | |