பரியோங்க ளிங்கிசையை நீக்கிப் போட்டுப் பராபரத்தை நோக்குவதங் கிசம தாகும் சரியோரா வதுஞ்சகல மதத்தி னாலுந் தனித்தனியே கண்டிக்கப் படாதென் பாரே. | 47 |
| | |
என்பார்க ளிங்கிசையா யிருக்கு மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி அன்பார்க ளிதுவல்லோ சத்தி யந்தான் ஆரதிக ஆன்மசரீ ராதி சுபாவம் வன்பார்க ளபகரிப்பை விட்டு விட்டு மனமுரைத்தா லூரதிக மென்று பேரு தன்பார்கள் பிறசரீ ராதி சுபாவந் தானென்ற தற்குலலட் சணந்தான் பாரே. | 48 |
| | |
பாரப்பா பிரமமது சுபாவ மாகப் பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று நேரப்பா பிரமசரிய மிதுவாங் கண்டால் நிரந்தரமுந் தயவினுடை நினைவு கேளு தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச் சகலசனம் நம்மைபோ லென்றே யெண்ணி ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார் அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே. | 49 |
| | |
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரைகற்ற சமயம்பொய் யென்று தள்ளி ஆணப்பா திடப்பட்டாடட் சேப மென்பார் வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக் கத்தால் வீணப்பா மானாபி மானம் வந்து வெறும்வெளிபோற் சொப்பனமா மென்று தள்ளித் தோணப்பா தாங்காம லகண்டத் துள்ளே சொக்குவது சமயமென்று சொல்ல லாமே. | 50 |
| | |
சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம் வேறில்லை நாமதுதான் எனலே முத்தி | |