பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்437


அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு
     அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி
நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று
     நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே.
51
  
தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்
     சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்
வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு
     மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா
கோனென்ற தன்னிடத்தே யொன்று மில்லை
     கூடிநின்று போனதில்லை யென்றே யெண்ணி
வேனென்ற நிர்க்குணமும் வேறொன் றில்லை
     வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே.
52
  
ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு
     அறைகுவேன் நன்றாகப் பூர ணந்தான்
வாச்சப்பா சத்யமென்ன மித்தை யென்ன
     மருவியதோர் நானேதான் என்ற தாரு
வீச்சப்பா நமக்குவந்த பந்த மேது
     வேதாந்த சாத்திரத்தில் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்
     குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே.
53
  
நோக்கப்பா பிரமமதி லோகத் துள்ளே
     நுகர்ந்துநின்ற காமியத்தை நரகென் றெண்ணி
வாக்கான வெறுப்பதுசொப் பனம்போ லெண்ணி
     மசகமிது வென்றுதள்ளி மனமீ தேறித்
தாக்கான பொருளல்லோ சச்சிதா னந்தம்
     தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு
போக்கான வேதாந்தப் பிரம சாரம்
     புகட்டுகிற குருச்சொல்பூ ரணமென் றெண்ணே.
54
  
எண்ணியதோர் மூன்றையுந்தா னுண்மை யென்றே
     எண்ணியிருக் கிறதாரென் றியம்பு வார்கள்
தண்ணியதோர் குருவுரைத்த வுபதே சத்தைத்
     தானறிந்து பூரணமாய் முத்த னாகிப்