பக்கம் எண் :

440சித்தர் பாடல்கள்

கன்றாக வுரைப்புநிரந் தரமு நினைவாய்க்
     காரணகா ரியங்களெல்லாந் தவிர்ந்து போட்டு
ஒன்றான வொருபொருளாய் நின்றா யானால்
     உத்தமனே பிரத்தியா கார மாச்சே.
63
  
ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்
     அப்பனே சுத்தசை தன்ப மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்
     ஓடியெங்கும் மறைந்திருக்குங் கண்டா லுந்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி
     யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண
வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு
     விளம்புகிறேன் ஐந்துவகைச் சமாதி தானே.
64
  
தானென்ற அதிட்டான சைதன் யத்தைத்
     தனையளித்து நிலவறையில் தீபம் போல
ஆனென்ற அலைவற்றுத் திடம தாக
     அப்பனே அகண்டமது தானாய் நின்று
வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்
     விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு
வானென்ற சவ்விகற்பச் சமாதி கேளு
     மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே.
65
  
உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்
     உறவாகக் கேட்டாக்கந் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று
     தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்
     விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது
தள்ளாகத் தன்னையனு சந்தா னித்துத்
     தலமான சந்தானந் திரிசான மாச்சே.
66
  
ஆச்சப்பா இதன்பேர்சவ் விகற்ப மென்பார்
     அருளியதோர் நிருவிகற்பச் சமாதி கேளு!
ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி
     உத்தமனே சாத்தனுத்தங் கேம றந்த