ஆச்சப்பா துக்கமுற்று மிருகம்போல ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால் கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே கொண்டாற்பூ ரணத்தில்நிரு விகற்ப மாமே. | 67 |
| | |
ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும் அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும் ஒமப்பா காலமென்ற நிறையு மில்லை உத்தமனே பிரபஞ்ச மில்லை யென்று சோமப்பா விகாரந்தோற் றும்ப்ர பஞ்சஞ் சொப்பனம்போல் பாசமென்ற மதிய டக்கில் ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும் அகத்தான காரணனா மென்றே யெண்ணே. | 68 |
| | |
எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே ஒண்ணியல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந் தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே. | 69 |
| | |
போச்சதுவுங் கடிகையென்று தானாய் நின்றாற் புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா ஆச்சதுவு மவுனமுற்று வாயை மூடி ஆசையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி வாச்சதும்ப்ர பஞ்சத்திற் கண்ட தெல்லாம் வாலையுட னுரைபோலும் மலைபோற் காணும் கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக் கூறுமத னங்கம்போற் குறியைக் காணே. | 70 |
| | |
குறியன விண்ணுதித்த மேகம் போலுங் கோதியதோர் சொப்பனப்ர பஞ்சம் போலும் நெறியான அகண்டம் நம் மிடத்தே மைந்தா! நேராக வுண்டாகில் இற்றுப் போற்று | |