இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. | 20 |
| | |
விளையாடிப் போதமய மாக வுந்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி அலையாம லாரொருவ ருறவு மற்றே ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. | 21 |
| | |
நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான் வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள் மந்திரங்கள் கோடானு கோடி யென்றும் சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந் திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான் வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. | 22 |
| | |
பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான் வீரப்பா நீராட்டிப் பூசை செய்து வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள் தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே கண்டவரே கயிலாசத் தேகந் தானே. | 23 |