II. காகபுசுண்டர் உபநிடதம் - 31 காப்பு எண்சீர் விருத்தம் ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு; அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு; நீதியா மாரூட ஞானம் பெற்ற நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு; சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற் துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத் தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார் சீவேச ஐக்யமது தெரியுந் தானே. |