சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம் சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்; தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில் சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்; மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை மூலவிந்து களாதீத மொழிய லாமே. | 23 |
| |
மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின் மோனபிரா ணாதியதே நாத மாச்சு; தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற் சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்; ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம் உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான் வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே. | 24 |
| |
விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. | 25 |
| |
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. | 26 |
| |
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம் கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்; | |