நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும் நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே. | 22 |
| |
கேளப்பா சிவமோடி அண்டம் பாயும் கிருபையா யண்டமது திரும்பிப் பாயும் கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான் குருவான தசதீட்சை யொன்று மாச்சு மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்; ஆளப்பா நரைத்தமா டேறு வோனே! அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே. | 23 |
| |
அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி! அரகரா உன்போல முனியார் காணேன்; தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா; பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும் பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா! பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே. | 24 |
| |
பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே! பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்; குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்; தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச் சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய் அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய் அரகரா கண்ணாடி லீலை தானே. | 25 |
| |
லீலைபொற் காணுமுகம் போலே காணும் நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்; ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே அரகரா சக்கரங்க ளாறுங் காணும் வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணுஞ் | |