நாடிலெழுத்து ஆறும் நடுவெழுத் தீரைந்தும் ஓடி னொருபதினா லாகுமோ - ஓடாய்நீ ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சே ஓரெழுத்தி லேசென் றுரை. | 74 |
| |
உறைகலத்தினாய் போல உள்ளமல மெல்லாம் அறுத்தடைந்து நெஞ்சே அறுதி - நிறைத்துப் புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும் களியழியுங் காலத்துக் கே. | 75 |
| |
காலங் கழித்துக் கடைவாயில் பாலுறுமுன் வேலங் கனைய விழிமடவார் - ஏலக் குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கைக் கழியெடுத்துப் போடுமுன் கண்ணால். | 76 |
| |
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள் பார்க்கவேண் டுந்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால். | 77 |
| |
உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும் எந்நாளும் பாம்பின்வாய் தேரைபோல் - முன்னால் அம்பிபட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு நம்பி துணைக்கு முற்றும் நம்பு. | 78 |
| |
நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து கும்பிடா தார்க்குங் குறையுண்டோ - நம்பிப் பளிங்கொளிபோல் நெஞ்சே பரந்திடாலா மெங்கும் விளங்கனலோ டேசேருமே. | 79 |
| |
ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினையுமே வென்று சாம நடுவதனில் சார்ந்ததிலே - சேமமுடன் காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு, பாலிக்க லாமதுநாம் பார். | 80 |
| |
பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும் காரனைய வாரணத்தை தான்கண்டு - சீராய | |