பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்505


மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம்.
66
  
கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா - தினமனமே
சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி.
67
  
புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால்.
68
  
கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி - மாலை
இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று.
69
  
சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய்.
70
  
தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு.
71
  
இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு - எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும்.
72
  
அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ
அருளறிவு தானே ஆனந்தம் - அருளறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாவதும் தானறி வினால்.
73