மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும் விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி - நண்ணரிய மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக் காயமெல்லாம் நானாக் கரு? | 59 |
| |
கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம் போல் நெஞ்சே கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் - கருதித் திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால் மரியாரில் லாதக்கால் வந்து. | 60 |
| |
வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித் தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில் விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே தட்டுகெட்டுப் போகாதே தான். | 61 |
| |
தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே வானம் பிளந்து வழிகூடின் - நானுமதில் நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி தோயுமதி தானே தொடங்கு. | 62 |
| |
தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே அருஞ்சரத் தம்மத னடி. | 63 |
| |
மதனசரத் தால்மனமே வையம் மயங்கி விதனத் துறலால் வேறில்லை - மதனாலே தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண் மெத்த சுகத்தை வெறுத்து. | 64 |
| |
வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே பொறுத்த மயக்கிற் போகாதே - குறித்தெடுத்து தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள் கூடினா லாமே குணம். | 65 |
| |
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே வணங்குங் குணமாக வந்து - வணங்கியே | |