பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால் மெய்யிலே நின்றறிவோம் மெய். | 51 |
| |
மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய் ஐயாறு மாதம் அறுபதாய் - மெய்யாகக் கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக் கண்டுருகி நெஞ்சே கனி. | 52 |
| |
கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய் கனிருசிபோ லாகுமோ காய்தான் - இனியதுகேள் நானும் நீயும் கனிகாண் நடுவிருந்த தேருசிகாண் தேனும் பாலும் போல் சிவன். | 53 |
| |
சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்த றுத்துச் சிவதலங்க ளைத்தேடி சேரா - தவ தவங்கள் பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தக்கால் எண்ணாதே அஞ்சியேங்கா தே. | 54 |
| |
ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும் ஏங்காதே சற்றும் இளைக்காதே - தாங்காமல் கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான் இன்றுகுறித் துண்மையிதென் றெண். | 55 |
| |
எண்ணரிய நெஞ்சே இனியநற் பாலதனை அன்னந்தண் ணீர்நீக்கி யேயிருந்து - தன்மைபோல் துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய் இன்பங் களைச்சேர்ந் திரு. | 56 |
| |
சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் - போங்காலம் வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால் ஏய்த்திடுவா னெஞ்சே எவன். | 57 |
| |
எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாரு முண்டோ கவனமற நின்று கருதின் - புவனமெல்லாம் வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே மற்றுடலைஉண்கிறதே மண். | 58 |