போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக் காற்றுங் கனலுங் கருத்துஒன்றாய்ப் - பார்த்தறிவால் சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச் சத்தமறித் துற்றதிலே தங்கு. | 89 |
| |
தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே மங்குங் கருக்குழிக்குள் வாராமல் - தங்கும் கருவும் புனலும் கதியும் கெதியும் விதியும் திருத்தான வெளி. | 90 |
| |
வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய் வெளியி லொளியா யிருக்க - வெளியிற் கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக் கருவறுத்துப் பார்த்தலே காண். | 91 |
| |
காணு மனமே கரிகாலனை வதைத்துக் காணு முலகமெல்லாம் காணுருவாய் - தானு மனவிரக மானபுலி மன்றுள் நடனப் பணவரவின் உற்ற பாதம். | 92 |
| |
பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க நாதத்தா னென்று நெஞ்சே நன்றாகப் - போதத்தான் ஆரணத்தி னோடடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு நீறணிந்து கொண்டிரு நித்தம். | 93 |
| |
நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும் கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் - பெற்ற குருவினிரு பாதங் குளிர நினைநீ தருமதுபற் றாமனமே தான். | 94 |
| |
தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான் தானவனு மங்கே தரிக்கொட்டான் - மானார் கலங்கும் கலவிக்கருத்திற்றால் தான் கொடுப்பான் இலங்கும் அடிதேர் நெஞ்சே. | 95 |
| |
நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம் எஞ்சாவென் சொல்லென் றிகழாதே - நெஞ்சே | |