பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்515


21. கல்லுளிச் சித்தர் பாடல்

‘கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடு
எல்லாம் தவிடு பொடி’

என்று ஒரு பழமொழி இந்தச் சித்தரைப் பற்றி வழங்குகிறது. இந்தச் சித்தரைக்
கண்டால்  மலைகளும்கூட  குறுக்கே நில்லாது  பயந்து வழிவிடும் என்பதால்
இப்பழமொழி ஏற்பட்டதாகக் கூறுவர்.

     இவர்  பெயரால் கல்லுளிச்  சித்தர் ஞானானந்த சூத்திரம் 16, கல்லுளிச்
சித்தர் பாடல் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    சித்தர் என்போர் யார்? என்பதற்கு இவர் பாடல்கள் விடையளிக்கின்றன.
பந்தங் கடந்தவனே சித்தன் - பாரில்
பஞ்சமா பாதகத்தை விட்டோனேபத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன்
அதிலென் நிலைமை கண்டவனே சீவமுத்தன்

     இப்படி  சித்தனை  இனங்காட்டிய  கல்லுளிச்  சித்தர் முதல் பகுதியில்
என்ன  என்ற  வினாக்களைத்  தொகுத்து இரண்டாம் பிற்பகுதியில் வேணும்
வேணும் என்று வேண்டுமளவு ஞானத்தைக் கொட்டுகின்றார்.

கட்டி வராகன் இருந்தென்ன - அதைக்
காவல்கள் போட்டு நீ காத்திருந்தென்ன
நீரில்லா கிணறு இருந்தென்ன மனம்
நேராய் நடவாத பிள்ளை இருந்தென்ன