பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்549


மந்திரந் தனைத் தெரிந்தேன்                      ஓங்கார
     வட்டமதைத் திட்டமதாஎட்டிஅறிந்தேன்
இந்திர பீடம்முணர்ந்தேன்                     மோனநிலை
     இன்னதென்று கண்டுமனம் நன்னயங்கொண்டேன்.
27
  
அழியாப் பொருளிதுதான்                    என்றுதொழுது
     அகமகிழ்ந்தேன் ஞானச் சுகமடைந்தேன்
வழியாய் உணர்ந்தவர்க்கு                     மோட்சநிலை
     வாய்க்குமென்று பேய்க்குணத்தைப் போக்கிப்புகழ்ந்தேன்.
28
  
வேத முடிவுணர்ந்தேன்                           எங்கும்
     விளங்கும் பொருளைக்கொண்டு உளங்குளிர்ந்தேன்
நாத வெளியில் உற்றேன்                           இந்த
     நானிலத்தோர் புகழவே ஞானிபேர் பெற்றேன்.
29
  
வெட்ட வெளிதானே                              யாமிது
     வென்றறிந்துக் கொண்டவர்வே றொன்றையுமுன்னார்
பட்டப் பகலதனை                             இருளாகப்
     பார்த்தவருக்குக் காணஞான நேத்திரமுண்டோ?
30
  
மூல முதலி மொள்ளே                     என்றுமுன்னாள்
     மொழிந்தார் நமதுகுரு மூலரன்றே
சாலவே மறைநான்கும்                      சொன்னதோர்
     சங்கைதெளிந் தானந்தம் பொங்கித் ததும்ப.
31
  
தான் நான் என அற்று                          குருவருள்
     தன்னைமற வாமல் என்னை என்னாலறிந்தேன்
ஊனுடல் அழியாமல்                         நிட்டைதனில்
     உற்றவிழி துயிலாத பெற்றிலிருந்தேன்.
32
  
ஒருபொருள் விரிவாலே                        கண்டறிந்த
     உற்பனமெல் லாம்விழலாங் கற்பனையென்றே
அறிவால் அறிந்து கொண்டு                    சிதம்பரத்து
     ஆடல்கண்டு ஆனந்தப் பாடல் விண்டேன்.
33