பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்551


புத்தியும் வித்தையுந் தந்தருள்
     பாதனைப் போத மயமாக்கி
சித்தியும் பத்தியும் கண்டந்த
     நாதனைத் தேகல யத்துள்வைத்து.
3
  
சித்தம் பலத்திலச் சிதம்பர
     வித்தையைத் தேறித் தெளிந்தேதான்
சத்தம் பிறந்திட வாசி
     அறிந்து தானும் நடந்தேனே.
4
  
நத்தும் உலகத்தோர் சித்தை
     அறிந்திட நல்ல ததியெனவே
தத்துவ மான எழுத்தஞ்சு
     னாலேதான்வரை கீறினனே.
5
  
அங்கி பொருந்தின வீட்டுக்கோர்
     அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக
தங்கி இருந்திடு மந்திர
     விஞ்சையைத் தான்கண்டு பேறும்பெற்றேன்.
6
  
அங்கங்கே மாறினால் அட்டகர்
     மத்தொழில் ஆடும் இதுதானும்
சங்கை யுடனே துகையைப்
     பெருக்கித் தான்வரை கீறிடுவாய்.
7
  
தானாயிருக்கும் பிரமத்தின்
     தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
     ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
8
  
அருவு முருவும் திருவும்
     பலவுமாய் ஆதிசி தம்பரத்தைக்
கருவும் குருவும் கண்டறிந்
     தோர்கள் கையா லெழுதுவரோ?
9
  
தானந்த மான தத்துவங்
     கண்டோர்கள் தானேதா னெவ்வுயிர்க்கும்