மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை மேவியுனக் குட்காணும் வேதை மார்க்கம் ஆளாக வென்றேனு மெப்போ தேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே. | 1 |
| |
தூங்குவாய்ச் சாமததே விழித்துக் கொள்ளு தூங்காமல் தூங்கிவெறுந் தூக்கம் தள்ளு நீங்காமமல் நியமித்தே நிறைந்து நில்லு நிலமான சாமத்தைச் சுத்தம் செய்தே ஆங்காரச் சாதியெலா மகற்றிப் போடு அன்பாக வாதித்தே விரட்டிப் போடு பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாகப் போதித்தேன் சாதிப்பாயே. | 2 |
| |
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள் தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள் தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும் அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால் அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள் கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர். | 3 |