பள்ளமும் மேடும் குறுக்கிடில் - இசை
பாடி நடந்து கடப்பவன்!
கள்ளமும் வஞ்சமும் கண்டிடில் - இரு
கால்களில் எற்றிப் புடைப்பவன்!
நற்கலை கற்றுத் தெளிபவன் - தமிழ்
நாட்டை உயர்த்தும் மனிதனாம்!
பொற்சுட ராகப் பொலிவுற - இந்தப்
புண்ணிய மைந்தன் வருகிறான்!
‘அமுத சுரபி’ - 1955
|