பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 1

எழுச்சி வேண்டும்

எழுச்சி இளைஞர்க்கு வேண்டும் - தட்டி
எழுப்பத் தாய்நாட்டினை மீண்டும்! (எழு)

அடிமையும் மிடிமையும் 
பகையும் பதைத்தே 
அடியற்ற மரம்போல 
விழவிக் கணத்தே! (எழு)

முடியாத தில்லையே, ஆமை - போல 
       மெதுவாய் நகருதல் தீமை!
துடிதுடித் தெழுவீரே நாட்டை - வீழ்த்தத் 
       தோதுசெய் வோரையே ஓட்ட! (எழு)

“தமிழுனுக்கே தமிழ் நாடு” - இதைத் 
       தடுக்க யார் செய்தாலுங் கேடு
சமர்செய்து வீழ்த்துவீ ரின்றே மேலும் 
       சாடுந் திறல்கொண்டு நின்றே!

‘திராவிட நாடு’ - 1944