பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 123

நேய உணர்ச்சியால்
       நெஞ்சமும் விம்ம,
வாயது பிறரை
       ‘வாவெனக் கூவ
வரைந்திடும் வில்லில்
       பிறந்திடும் நாணாய்
விரைந்தனன் தாவி
       வெளியில் குதித்து!

காதலன் செய்தக் கடுந்துயர் பார்த்து
ராதைதன் நெஞ்சம் நடுங்கினள் சோர்ந்து!
என்னெனக் கூறுவர், என்னெனப் பேசுவர்
என்னென எண்ணி இருப்பவர் மற்றவர்?


‘பித்தன்’ என்றனர்; ‘பேயன்’ என்றனர்;
‘எத்தன்’ என்றனர் ஏசினர் பெற்றோர்!

“மகளைக் கெடுத்து மணமுங் கெடுத்துப்
புகழைக் கெடுத்தான் புலையன் என்றனர்!

பறையரின் கூரை பற்றி யெரிந்தால்
இறைவன் ஆணை இருந்த தப்படி!

மனையில் அமர்ந்த மணமகன்ஓடி
அணைப்பது நன்றோ, அனர்த்தமு மன்றோ?

மாரிப் பறையன் மகனொடு கூடும்
சேரிப் பறையன் சிறுபயல் கண்ணன்!
என்மகள் மேனி இனியும் தீண்டின்
புன்மகன் தன்னைப் புடைப்பேன், மிதிப்பேன்!
ஆதிநாள் தொட்டே அகிலத் திருந்த
ஜாதியும் பெரியோர் தகைமையும் குன்றப்
பறையன் கண்ணன் பழியை விளைத்தான்!
முறையோ’ என்று முகமும் எரியக்