பக்கம் எண் :

142தமிழ்ஒளி கவிதைகள்2

மறுகணம் கண்ணன் மலர்ந்திடு கின்றான்
உழவர்கள் கண்ணன் உருவொடு நிற்பார்
ஆயிரம் வாய்கள் அவன்புகழ் பேசும்
ஆயிரம் கைகள் அவன்பணி யாற்றும்!

கண்ணா உனக்குக் கவிமலர் சூட்ட
மண்ணக மெங்கும் மலர்மணம் வீச
மேதினம் இன்று விரைந்தது பாராய்!
‘மேதின ரோஜா’ மலர்ந்தது பாராய்!