பக்கம் எண் :

64தமிழ்ஒளி கவிதைகள்2

தாய் செய்த குற்றம்

ஏழைமை, முதுமை இரண்டினையும் அவள்
ஏற்றனள் ‘அன்னை’ எனும் பெயரில்!

இருளும் புழுதியும் வாய்ந்த குடில்தனில்
ஏழை அன்னைஅவள் வாழ்ந்து வந்தாள்!

சிற்சில மாதங்கள் முன்னர், அவள் மகன்
சென்று விட்டான் தேச யாத்ரி கன்போல்!

அன்னைதன் குடிசையின் வாயிலிலே, மகன்
அன்புமுகங் காணக் காத்திருந்தாள்!

கண்கள் விழித்திடும் நேரத்திலே, ஒரு 
காலையிலே அவன் வந்து விட்டான்!

அன்னையின் கைகளை முத்தமிட்டான். அவள்
அன்பைச் சோறாகவே ஆக்கி வைத்தாள்!

வீடு திரும்பிய மைந்தனுக்குச் சுவை
மேவும் உணவுகள் செய்த ளித்தாள்!

உண்டு முடிந்தபின் மைந்தனுமே, அன்னை
உள்ளத்தைப் பாசத்தில் மூழ்க வைத்துப்

பேசி யிருந்தனன்; மாலையிலே ஒரு
பேச்சை மெதுவாகச் சொல்லி வைத்தான்!

“மக்கள் பணிசெய்யச் சென்றிருந்தேன், இதை
மாபெரும் குற்றமாய்ச் சொல்லு கிறார்!

கைகளில் ஆயுதம் ஏந்தியுமே, ஊரைக்
காப்பவர் என்னை மிரட்டுகிறார்!

என்தலை காணும் இடத்தினிலே, பற்றி
யிட்டுச் சென்று சிறை போட்டிடுவார்;