|
கண்ணின் கருமணியே, காசினிக்கு மாமணியே,
கண்ணீர் துடைக்கவரும் காலமே நீ வருக!
அன்னை ஒருத்தியதோ அங்கே நெடுந்தொலைவில்
தன் மகனைத் தூக்கேற்றிக் கொல்லும் சதிகாரர்
வஞ்சமெண்ணி அஞ்சுகிறாள் வாராய் மணி விளக்கே!
அன்னவள்தன் நெஞ்சத்தின் ஆறுதலே வாராய் நீ!
தூக்குக் கயிறுதனைத் துச்சமென எண்ணுமகன்
கண்ணில், உளத்தில் களிப்பேற்ற வாராய் நீ!
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே,
அன்பே, இருட்கடலின் ஆழத்திருந்து வந்த
முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ!
வாராய் உனக்கென்றன் வாழ்த்தை யிசைக்கின்றேன்!
‘முன்னணி’ - 1949
|