கணபதியும்
கந்தனும்
தொந்திப் பிள்ளை யாருடன்
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர்.
வழியில் பெரிய மலையிலே
வாய்க்கு நல்ல பழங்களாய்
இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.
"குடுகு" டென்று குமரனே
குதித்து மலையில் ஏறினன்.
மலையைக் கண்ட பிள்ளையார்
மலைத்துத் தொந்தி தடவினார்.
“களைப்பு அதிகம் ஆனது.
காலம் மெத்த வலிக்குது.
|