வேண்டாம் இந்த சம்பந்தம். வெட்கக் கேடு ! போய்வாரோம்” என்றே பெண்ணின் தாயாரும் ஏளன மாகக் கூறியபின் அருமைப் பெண்ணைத் தன்னுடனே அழைத்துக் கொண்டு போனாளாம். * வகைவகை யான சாப்பாடு வயிறு முட்டத் தின்றிடலாம் என்றே எண்ணி வந்தவரும் ஏமாற் றத்துடன் திரும்பினராம் !