பக்கம் எண் :

மலரும் உள்ளம்149

ஏமாந் தேநீ போகாதே!
எழுந்து உள்ளே பார்த்திடுவாய்”

என்றே கூறிட, அத்திருடன்
எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே.

விரைவில் சென்று சரஸ்வதியும்
"வெடுக்" கெனக் கதவைப் பூட்டினளே!

திருடர் நால்வரும் அறைக்குள்ளே
"திருதிரு" எனவே விழித்தனரே!

சரஸ்வதி தெருவில் வந்தனளே; 
சத்தம் போட்டுக் கத்தினளே.

“ஐயோ! திருடன்! ஐயையோ!
அபாய“ மெனவே அலறினளே.

ஊரார் எல்லாம் தடியுடனே
ஒன்றாய்க் கூடி வந்தனரே.

கதவைத் திறந்து திருடர்களைக்
கயிற்றால் கட்டி இழுத்தனரே.