மலையும் வாழ்வும்
திருப்பதி மலைக்குச் செல்வதெனத்
தீர்மா னித்தார், என் தந்தை.
“என்னையும் அழைத்துச் சென்றிடுவீர்”
என்றே அவரை நான்வேண்ட,
"சரி" என அவரும் கூறினரே,
தந்தையும் நானும் புறப்பட்டோம்.
மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.
“களைப்பொடு மயக்கம் வருகிறது.
காலும் அத்துடன் வலிக்கிறது.
எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்” என்றேனே.
“இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வா”யென அழைத்தனரே.
|