பக்கம் எண் :

மலரும் உள்ளம்181

அறுந்து தனியாய் இருந்திட்ட 
    அந்த முக்குத் துண்டதனைப் 
பறந்து வந்த ஒருகாக்கை
    பாய்ந்து தூக்கிச் சென்றதுவே.

கையைத் தட்டி வைத்தியரும்
    கதறிப் பார்த்தார். ஆனாலும்
ஐயோ, ஏதும் பயனில்லை!
    அலறித் துடித்தாள், கறுப்பாயி.

காக்கை மூக்கைத் தின்றதுவோ!
    கடலில் போட்டு விட்டதுவோ!
மூக்கை இழந்த சூர்ப்பனகை 
    முக்கா டிட்டுத் திரும்பினளே!