மூக்கைத் தூக்கிய காக்கை
வேலன் மனைவி கறுப்பாயி
விடிந்ததும் சண்டை துவக்கிடுவாள்;
காலம் எல்லாம் சண்டையிலே
கழிப்பாள், கணவன் வருந்திடவே.
சண்டை ஒருநாள் முற்றிடவே
"சட்"டென வேலன் கோபமுடன்
அண்டையி லிருந்த கத்தியினால்
அறுத்து விட்டான், அவள்மூக்கை.
வெட்டி எடுத்த மூக்குடனே
விரைந்து வைத்திய ரிடம்சென்றாள்.
“ஒட்டுப் போட்டுத் தைத்திடுவீர்.
உமக்குப் புண்ணியம்” எனச்சொன்னாள்.
துண்டு மூக்கை மேஜையின்மேல்
தூக்கி வைத்த வைத்தியரும்
துண்டுத் துணியால் அவள்முகத்தைத்
துடைத்துக் கொண்டு இருந்தனரே.
|