பக்கம் எண் :

மலரும் உள்ளம்199

வண்டி நகர்ந்ததும் எங்களிடம்
வந்தார், "டிக்கெட்" சோதகராம்.

“எங்கே, உனது டிக்கெட்டை
எடுப்பாய்” என்றார் அம்மனிதர்.

உடனே, பைக்குள் கைவிட்டேன்;
உள்ளே காணோம் டிக்கெட்டை!

"ஐயோ !" என்றேன்; திடுக்கிட்டேன்;
அலசிப் பார்த்தேன்; பயனில்லை

"பலகா ரத்தை வாங்கிடவே
பணத்தை விரைவாய் எடுக்கையிலே

டிக்கெட் கீழே வீழ்ந்திருக்கும்"
நினைத்தேன், இப்படி, அதற்குள்ளே,

"ஏனோ தம்பி, நடிக்கின்றாய்?
என்னை ஏய்த்திட முடியாது!

எடுப்பாய் பணத்தை இருமடங்கு.
இங்கே எதுவும் பலிக்காது!"

என்றார். அவரிடம் உண்மைதனை
எடுத்துக் கூறியும் பயனில்லை!

அத்தனை பேர்கள் மத்தியிலே
அவமா னத்தால் தலைகுனிந்தேன்.