பக்கம் எண் :

மலரும் உள்ளம்223

சட்டிச் சாமியார்

மொட்டை அடித்துப்
பட்டை சாத்திக் 
கொட்டை அணிந்து
சட்டை இன்றிக் 
கட்டை மாட்டி,

வட்டம் இட்டும்
பட்டைச் சாதம்
கிட்டா ததனால்
ஒட்டி உலர்ந்த
சட்டிச் சாமியார்
"செட்" டைச் சேர்ந்த
குட்டைச் சாமியே,
"குட்மார் னிங்"ஸார்!